TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்புக் காட்சி வாகனங்கள்

January 30 , 2025 2 days 42 0
  • 76வது குடியரசு தினக் கொண்டாட்டங்களில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வினைக் காட்சிப்படுத்தும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அணிவகுப்புக் காட்சி வாகனமானது, 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த அணிவகுப்புக் காட்சி வாகனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • "Eternal Reverence: The Worship of 14 Deities in Tripura - Kharchi Puja" என்ற கருத்துருவிலான திரிபுரா மாநிலத்தின் அணிவகுப்புக் காட்சி வாகனமானது இரண்டாவது இடத்தைப் பெற்றது.
  • "Etikoppaka Bommalu - Eco-Friendly Wooden Toys - சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் நன்கு தயாரிக்கப் பட்ட பொம்மை வகைகள்" என்ற ஒரு கருத்துருவிலான ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அணிவகுப்புக் காட்சி வாகனமானது மூன்றாவது இடத்தைப் பெற்றது.
  • படைப் பிரிவுகளில் சிறந்த அணிவகுப்புப் படையாக ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ் படைப் பிரிவு தேர்வு செய்யப்பட்டது.
  • மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) /துணைப் படைகள் பிரிவில் டெல்லி காவல் அணி வகுப்புப் படை வெற்றி பெற்றது.
  • மத்திய அமைச்சகங்கள்/துறைகளில், பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தின் "ஜன்ஜாதிய கௌரவ் வர்ஷ்" என்ற அணிவகுப்புக் காட்சி வாகனத்திற்கு விருதானது வழங்கப் பட்டது.
  • "அமைச்சகத்தின் விரிவான திட்டங்களின் கீழ் ஆதரவளிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பன்முகப் பயணம்" என்ற சித்தரிப்பிற்காக வேண்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் விருதினை வென்றது.
  • இதில் கூடுதலாக, இரண்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
    • "இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகள்" என்ற கருத்துருவிலான அதன் அணி வகுப்புக் காட்சி வாகனத்திற்காக வேண்டி மத்தியப் பொதுப் பணித் துறைக்கு (CPWD) ஒன்றும்,
    • மற்றொன்று 'ஜெயதி ஜெய் மமா பாரதம்' நடனக் குழுவிற்கு வேண்டி அதன் நடன நிகழ்ச்சிக்காகவும் வழங்கப்பட்டன.
  • முதன்முறையாக, 'ஷஷக்த் ஔர் சுரக்சித் பாரத்' (வலுவான மற்றும் பாதுகாப்பான இந்தியா) என்ற கருத்துருவில் முப்படைகளின் அணிவகுப்புக் காட்சி வாகனம் காட்சிப் படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்