2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அன்று நிலவரப்படி, கோதுமைப் பயிர் வளரும் இந்தியாவின் எட்டு முக்கிய மாநிலங்களின் மொத்த கோதுமைப் பயிர் உற்பத்தி என்பது சுமார் 122.724 மில்லியன் டன்களாக இருக்கும் என்று இஸ்ரோ மதிப்பிட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டின் ராபிப் பயிர் பருவத்திற்கான முன் கணிப்பிற்காக இது EOS-04 (RISAT-1A), EOS-06 (Oceansat-3) மற்றும் Resourcesat-2A ஆகியவற்றிலிருந்துப் பெறப்பட்ட ஒளியிழை மற்றும் புவி மேற்பரப்பினைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் ரேடார் (SAR) தொலை உணர்வு தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தியது.
2024-25 ஆம் ஆண்டு ராபிப் பருவத்தில், கோதுமை வளரும் இந்தியாவின் எட்டு முக்கிய மாநிலங்களில் கோதுமைப் பயிரின் விதைப்பில் உள்ள முன்னேற்றம் ஆனது நன்கு கண்காணிக்கப்படுகிறது.
கோதுமை வளரும் எட்டு முக்கிய மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, பீகார், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியன ஆகும்.