2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்
March 15 , 2025 18 days 120 0
தமிழ்நாடு அரசானது, 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை மார்ச் 14 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.
மார்ச் 15 ஆம் தேதியன்று மாநில அரசு ஆனது 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கையினையும் தாக்கல் செய்தது.
நிதி நிலை அறிக்கையின் முழக்கம் ஆனது, உள்ளடக்கம் என்ற ஒரு கருத்தினை மிக நன்கு வெளிப் படுத்துகின்ற 'எல்லாருக்கும் எல்லாம்' (அனைவருக்கும் அனைத்தும்) என்ற வாசகத்தைக் கொண்டிருந்தது.
நிதிநிலை அறிக்கையில் பொதுக் கடன் தவிர்த்து, 3,32,330 கோடி ரூபாய் என்ற மொத்த வருவாயுடன் மொத்தமாக 4,39,293 கோடி ரூபாய் செலவினம் பதிவாகியுள்ளது.
2025-26 ஆம் ஆண்டில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ₹35,67,818 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டில் GSDP ஆனது 14.5% வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2024-25 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் பதிவு செய்யப்பட்ட 14.49% வளர்ச்சி விகிதத்திலிருந்து சற்று அதிகமாகும்.
2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறையானது, சுமார் 1,06,963 கோடி ரூபாயாக மதிப்பிடப் பட்டுள்ளது என்பதோடு இது 2021-22 ஆம் ஆண்டிற்குப் பிறகு மதிப்பிடப் பட்ட மிக அதிகமாகும்.
இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) நிதிப் பற்றாக்குறையின் சதவீதம் ஆனது, 2024-25 ஆம் ஆண்டில் 3.26 சதவீதத்திலிருந்து 2025-26 ஆம் ஆண்டில் 3% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை என்பது மொத்த வருவாய்களுக்கும் மொத்தச் செலவினங்களுக்கும் உள்ள வித்தியாசமாகும்.
2025-26 ஆம் ஆண்டிற்கான வருவாய் செலவினம் ஆனது, 3,31,568 கோடி ரூபாயாகவும், வருவாய் செலவினம் ஆனது 3,73,203 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இது வருவாய்ப் பற்றாக்குறையினை 41,635 கோடி ரூபாயாக உள்ளது அல்லது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 1.17% ஆக உள்ளது.
வருவாய்ச் செலவினம் என்பது ஊதியம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு, உதவித் தொகைகள் மற்றும் மானியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியச் சலுகைகள் மற்றும் வட்டி செலுத்துதல்களுக்கு செலவிடப்படும் பணமாகும்.
வருவாய் வரவுகள் என்பது வரிகள் மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்கள், மத்திய அரசிலிருந்துப் பெறப்படும் மானியங்கள் மற்றும் மத்திய வரிகளில் அதன் பங்கு ஆகியவற்றிலிருந்து மாநில அரசு பெறும் பணம் ஆகும்.
2025-26 ஆம் ஆண்டிற்கான மூலதனச் செலவினம் 57,231 கோடி ரூபாய் ஆக மதிப்பிடப் பட்டுள்ளது.
மூலதனச் செலவினம் என்பது மக்கள் பயன்பாட்டு உள்கட்டமைப்பு, கட்டிடங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் போன்ற நிலையான சொத்துக்களை உருவாக்குவதில் ஏற்படும் செலவுகளைக் குறிக்கிறது.
முக்கியத் துறை ஒதுக்கீடுகளில், சுமார் 55,261 கோடி ரூபாய் கல்விக்கு ஒதுக்கப்பட்டது அதைத் தொடர்ந்து நகர்ப்புற மேம்பாடு மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு ஒதுக்கப் பட்டது.
2025-26 ஆம் ஆண்டில் மொத்தம் 1,62,096.76 கோடி ரூபாய் கடன் பெற்று, 55,844.53 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) நிலுவையில் உள்ள கடன் பங்கு 26.07 சதவீதமாக இருக்கும்.