TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

February 3 , 2025 24 days 129 0
  • வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித்துறை, மின்சாரம் மற்றும் ஒழுங்கு முறைச் சீர்திருத்தங்கள் என ஆறு துறைகளில் இந்த நிதிநிலை அறிக்கையானது சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சுமார் 50,65,345 கோடி ரூபாய் செலவினம் திட்டமிடப்பட்டுள்ளது, இது நடப்பு நிதியாண்டு செலவினத்தினை விட 7.4% அதிகமாகும்.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான செலவினம் (திருத்தப்பட்ட மதிப்பீடுகள்) 47.16 லட்சம் கோடி ரூபாயாகும்.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறையின் திருத்தப்பட்ட மதிப்பீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாகும்.
  • 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இனி புதிய வரிவிதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை.
  • புதிய வரிவிதிப்பு முறையில் 75,000 ரூபாய் என்ற நிலையான தொகைக் குறைப்புடன் 12.75 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டி இருக்காது.
  • நிதிநிலை அறிக்கையில் வளர்ந்து வரும் வேளாண் மாவட்டங்களுக்கான பிரதான் மந்திரி தான் தன்ய கிரிஷி யோஜனா அறிவிக்கப்பட்டது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கான ஒரு முதலீட்டு வரம்பு வகைப்பாடு ஆனது 2.5 மடங்கு அதிகரிக்கப்படும்.
  • பீகாரில் புதிய மக்கானா (தாமரை விதை) வாரியம், தேசிய உணவுத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டன.
  • முதல் முறையாக தொழில்முனைவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்டியலிடப் பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடபட்ட பழங்குடியினர் பிரிவினைச் சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்காக ஒரு புதியத் திட்டம் தொடங்கப்படும்.
  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் இணையவழியில் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கு சுகாதார நல சேவைகள் வழங்கப்படும்.
  • அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பை வழங்குவதை ஒரு நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் திட்டமானது 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • சுமார் 36 உயிர்காக்கும் மருந்துகளுக்குத் தற்போது சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் சுமார் 50,000 அடல் மேம்படுத்தும் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
  • இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அடுத்த தலைமுறை நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு வேண்டி மிக மேம்பட்ட தொழில்நுட்ப நிதிகளைப் பயன்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும்.
  • பள்ளி மற்றும் உயர்கல்விக்கு எண்ணிம வடிவிலான இந்திய மொழிப் புத்தகங்களை வழங்குவதற்கு பாரதிய பாஷா புஸ்தக் திட்டம் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்