2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறை அறிவிப்புகள்
April 25 , 2025
13 hrs 0 min
27
- தமிழ்நாடு சுகாதார அமைச்சர் 642 புதிய துணை சுகாதார மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
- சுமார் 10,000க்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள சில பகுதிகளில் இந்தத் துணை சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
- 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனையில் 500 முதுகலை படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக வழங்கப் படும்.
- எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 7,618 குழந்தைகளுக்கு தமிழ்நாடு அறக்கட்டளை மூலம், மாதம் 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
- மேம்படுத்தப்பட்ட 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரத்தச் சுத்திகரிப்பு (கூழ்மப் பிரிப்பு - டயாலிசிஸ்) வசதிகள் அறிமுகப்படுத்தப்படும்.
- அரசு மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கையானது 56%, உள்நோயாளிகள் 43% மற்றும் அறுவைச் சிகிச்சைகள் 61% என்ற அளவில் அதிகரித்து உள்ளது.
- சுமார் 20,197.40 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு 8.4% அதிகரித்து 21,906 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Post Views:
27