2025 ஆம் ஆண்டு வருடாந்திரப் பறவைகள் கணக்கெடுப்பு - பாங் அணை ஏரி
February 13 , 2025 10 days 56 0
பாங் அணை ஏரி வனவிலங்கு சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட 2025 ஆம் ஆண்டு வருடாந்திரப் பறவைகள் கணக்கெடுப்பில், 97 இனங்களைச் சேர்ந்த மொத்தம் 1,53,719 பறவைகளுடன், நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்து உள்ளது.
பாங் அணை ஏரி வனவிலங்குச் சரணாலயம் ஆனது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட ஈரநிலமாகும்.
இந்தச் சரணாலயத்தின் முதன்மை இனமான வரித்தலை வாத்தின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
பறவைகளின் எண்ணிக்கையில் ஒட்டு மொத்த அதிகரிப்பு என்பது பதிவாகியுள்ளது என்பதோடு 2024 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்டதை விட 83,555 அதிகப் பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.