TNPSC Thervupettagam

2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மருந்தியல் துறையின் ஏற்றுமதி

April 22 , 2025 15 hrs 0 min 23 0
  • இந்திய மருந்தியல் துறையின் ஏற்றுமதியானது 2025 ஆம் நிதியாண்டில் சுமார் 30,467. 32 மில்லியன்  டாலரை எட்டியதோடு இது 2024 ஆம் நிதியாண்டில் பதிவான 27,851.70 மில்லியன் டாலரை விட 9 சதவீதத்திற்கும் மேல் அதிகமாகும்.
  • மார்ச் மாதத்தில் பதிவான மருந்தியல் துறையின் ஏற்றுமதியானது ஆண்டிற்கு 31.21 சதவீதம் அதிகரித்து 3681.51 மில்லியன் டாலராக (2805.71 மில்லியன் டாலர்) இருந்தது.
  • 2025 ஆம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி (மதிப்பு அடிப்படையில்) 14.29 சதவீதம் அதிகரித்து 8,953.37 மில்லியன் டாலராக இருந்தது.
  • கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த பிற நாடுகள் ஐக்கியப் பேரரசு, பிரேசில், பிரான்சு மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியன ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்