கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சதயமங்கலத்தில் ஜடாயு புவி மையத்தில் உலகின் மிகப்பெரிய பறவை சிலை என்று கூறப்படும் ஜடாயு சிலை ஆகஸ்டு 17-ஆம் தேதி முதலமைச்சர் பினராயி விஜயனால் திறந்து வைக்கப்பட இருக்கின்றது.
இந்த 100 கோடி ரூபாய் திட்டமானது திரைப்பட இயக்குநர் மற்றும் சிற்பியான ராஜீவ் ஆஞ்சல் என்பவரின் கைவண்ணமாகும்.