TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டு முதல் மத்திய வரிகளின் பங்கு

March 3 , 2025 7 hrs 0 min 29 0
  • இந்திய அரசாங்கம் ஆனது மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கினைக் குறைக்க திட்டமிட்டு வருகிறது.
  • இந்திய நிதி ஆணையம் ஆனது, மத்திய-மாநில நிதி உறவுகளின் பிற அம்சங்களுடன் சேர்த்து, வரிப் பகிர்வு குறித்தும் பரிந்துரைகளை வழங்குகிறது.
  • அரவிந்த் பனகாரியா தலைமையிலான ஒரு குழு ஆனது, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தனது பரிந்துரையைச் சமர்ப்பிக்கும் என்பதோடு இது 2026-27 ஆம் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது 41% ஆக உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி வருவாயின் பங்கைக் குறைந்தது 40% ஆகக் குறைக்க மத்திய அரசு பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.
  • வரி வருவாயில் மாநிலங்களின் பங்கில் 1% குறைப்பானது, மத்திய அரசுக்குச் சுமார் 3,500 கோடி ரூபாயை ஈட்டக்கூடும்.
  • 1980 ஆம் ஆண்டில் 20% ஆக இருந்த மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் வரிகளின் பங்கு ஆனது தற்போது 41% ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்