TNPSC Thervupettagam

2029 ஆம் ஆண்டில் பெண் வாக்காளர்கள்

December 21 , 2023 213 days 202 0
  • 2029 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் உள்ள பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என்று பாரத் ஸ்டேட் வங்கியின் அறிக்கை கூறியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 68 கோடியாக இருக்கும் என்றும், அதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 33 கோடியாக (49%) இருக்கும் என்றும் இந்த அறிக்கை கணித்துள்ளது.
  • 2029 ஆம் ஆண்டு முதல், 37 கோடியாக உயர உள்ள பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை என்பது பதிவு செய்யப்பட்ட ஆண் வாக்காளர்களை விட 36 கோடியை விட அதிகமாக இருக்கும்.
  • மேலும் 2047 ஆம் ஆண்டில் பெண் வாக்காளர் எண்ணிக்கை 55% ஆக அதிகரிக்கவும், ஆண் வாக்காளர் எண்ணிக்கை 45% ஆகவும் குறையக்கூடும் என்று கணித்துள்ளது.
  • 1951 ஆம் ஆண்டு தேர்தலில் எட்டு கோடி பேர் வாக்களித்தனர்.
  • 2009 ஆம் ஆண்டு தேர்தலில் இது 42 கோடியாக இருந்த நிலையில், இதில் 19 கோடி பெண்கள் ஆவர்.
  • 2014 ஆம் ஆண்டில், வாக்காளர்களின் எண்ணிக்கை 13.7 கோடியாக அதிகரித்து 55 கோடியாக இருந்த நிலையில், அதில் 26 கோடி பெண்கள் ஆவர்.
  • இது பெண்களில் 5.8 மடங்கும், ஆண்களில் 5.2 மடங்கும் அதிகமாக இருந்தது.
  • 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களித்த ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
  • 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 67.01% ஆண் வாக்காளர்களும், 67.18% பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்