2029 ஆம் ஆண்டில் 5 டாலர் டிரில்லியன் மதிப்பிலான பொருளாதாரம்
August 20 , 2022 828 days 595 0
5 டிரில்லியன் டாலர் மதிப்பிலானப் பொருளாதாரம் என்ற ஒரு இலட்சிய இலக்கினை அடைய இந்திய நாடு எட்டு முக்கியச் சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளன.
அந்த சவால்கள்; முதலீடுகளை அதிகரித்தல், உற்பத்தித் திறன் மற்றும் கல்வி மற்றும் சுகாதார நலப் பயன்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வேளாண் உற்பத்தித் திறனை அதிகரித்தல், பெருநிலைப் பொருளியல் துறைகளின் உறுதித் தன்மையை நீடித்தல், உலகளாவிய மாபெரும் போக்குகளை நிர்வகித்தல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியனவாகும்.
எனவே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டிற்கு ஒன்பது சதவிகிதம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தால் மட்டுமே 2028-29 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக மாற முடியும்.