TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார அமைப்பின் புதிய உலகளாவிய மலேரியா உத்தி

May 3 , 2024 77 days 138 0
  • உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மலேரியா திட்டமானது, மலேரியா பாதிப்பு போக்குகளின் பாதையை மாற்ற உதவும் வகையில் 2030 ஆம் ஆண்டு வரை அதன் முன்னுரிமைகள் மற்றும் முக்கியச் செயல்பாடுகளை குறிப்பிட்டுக் காட்டும் ஒரு புதிய செயல்பாட்டு உத்தியை வெளியிட்டுள்ளது.
  • இந்த உத்தியானது உலக சுகாதார அமைப்பு அதன் முயற்சிகளில் கவனம் செலுத்த உள்ள 4 உத்திசார் நோக்கங்களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
    • விதிமுறைகள் மற்றும் தரநிலைகளை உருவாக்குதல்,
    • புதிய கருவிகள் மற்றும் புதுமைகளை அறிமுகப்படுத்துதல்,
    • தாக்கத்திற்கான உத்திசார் தகவலை ஊக்குவித்தல், மற்றும்
    • உலகளாவிய மலேரியா எதிர் நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு தலைமையை வழங்குதல்.
  • 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 608,000 மலேரியா காரணமான உயிரிழப்புகளும், 249 மில்லியன் புதிய மலேரியா பாதிப்புகளும் பதிவானதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • உலகளவில் 95% மலேரியா காரணமான உயிரிழப்புகளுடனும் 94% பாதிப்புகளுடனும் ஆப்பிரிக்கா அதிக விகிதாசாரப் பாதிப்பினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்