2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பினை எட்டும் பொருளாதாரம்
January 9 , 2024 321 days 295 0
தமிழ்நாடு முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜன் மற்றும் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் 2024 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில், ‘தமிழகத்தின் டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம் என்ற இலக்கினை அடைவதற்கான மாபெரும் முயற்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினர்.
இந்த இலக்கை அடைய, அடுத்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்கு தமிழக மாநிலம் 18% வளர்ச்சியை அடைய வேண்டும்.
இதுவரை எந்த நாடும் 18% வளர்ச்சியை அடைந்ததில்லை.
சீனா கடந்த 40 ஆண்டுகளில் 10 முதல் 11% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மனித உழைப்பு அதிகம் தேவைப்படும் தொழில் துறைகளின் உலகளாவிய ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 40% என்ற நிலையில், இந்தியாவின் பங்கு 35% ஆகும்.
இதில் சீனாவின் பங்கு 35% ஆகக் குறைந்தால், இந்தியா தனது வளர்ச்சிப் பங்கினை 12% ஆக முன்னேற்ற முடியும்.
இந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் குறைந்த செலவினத்திலான உற்பத்தி செயல் முறை, திறன் சாராத தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
தமிழ்நாட்டின் கடன் அளவு அதிகமாக இருந்தாலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அது பெரிதும் கவலைக்குரிய விவகாரம் அல்ல.