2030 ஆம் ஆண்டிற்கான வனப் பாதுகாப்பு நடவடிக்கைக்கான கூட்டு அழைப்பு
October 17 , 2023 409 days 261 0
ஒன்றிணைந்த வனக் கூட்டாண்மை (CPF) அமைப்பானது, 2030 ஆம் ஆண்டை நோக்கிய வனப் பாதுகாப்பு நடவடிக்கைக்கான கூட்டு அழைப்பினை விடுத்துள்ளது.
CPF என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையின் கீழுள்ள 16 உலக அமைப்புகளின் கூட்டாண்மை ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபையினால் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDG) அடைவதற்கான முயற்சியில், வனப்பாதுகாப்பு தொடர்பான தீர்வுகளை செயல்படுத்துவதற்கான அதிகரித்த நடவடிக்கை மற்றும் அரசியல் உறுதிப்பாட்டின் அவசியத்தை முன்னிலைப்படுத்துவதை இவை நோக்கமாகக் கொண்டுள்ளன.
2030 ஆம் ஆண்டிற்கான வனப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையானது நான்கு முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
நடைமுறைப் படுத்தல் மற்றும் செயல்பாடு;
தரவு, அறிவியல் மற்றும் புத்தாக்கம்;
வனப் பாதுகாப்புக்கான நிதி; மற்றும்
தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.
1990 ஆம் ஆண்டு முதல் காடுகளை அழிக்கும் நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் 420 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதிகள் அழிக்கப் பட்டுள்ளன.
2010-2015 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் ஆண்டிற்கு 12 மில்லியன் ஹெக்டேர் என்ற பரப்பளவாக இருந்த இவ்விகிதம் ஆனது 2015-2020 ஆம் காலக் கட்டத்திற்குப் பிறகு ஆண்டிற்கு 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவாக குறைந்துள்ளது.