TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டில் ஜவுளி ஏற்றுமதி

February 19 , 2025 4 days 50 0
  • 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது ஜவுளி ஏற்றுமதியை மூன்று மடங்கு அதிகரித்து 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • "ஐந்து F" என்ற ஒரு தொலைநோக்குத் திட்டக் கொள்கை மற்றும் ஜவுளித் துறையின் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் சுமார் 7.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய உலகளாவிய வாய்ப்புகள் மூலம் இந்த இலக்கை இந்தியா மிக முன்கூட்டியே அடைய முடியும்.
  • ஐந்து F கொள்கை என்பது - பண்ணை, இழை, துணி, வடிவமைப்பு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி ஆகியவற்றினைக் குறிக்கிறது.
  • இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி ஆனது தற்போது சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளதுடன், உலகின் ஆறாவது மிகவும் பெரிய ஜவுளி ஏற்றுமதியாளர் என்ற ஒரு அடையாளத்தினைப் பெறுகிறது.
  • ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழில் துறை ஆனது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.3%, தொழில்துறை உற்பத்தியில் 13% மற்றும் ஏற்றுமதியில் 12% பங்களிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்