TNPSC Thervupettagam

2030 பருவநிலை இலக்குகள்

June 28 , 2022 754 days 445 0
  • 2030 ஆம் ஆண்டிற்கான காற்று மற்றும் சூரிய திறன் இலக்குகளை அடைய இந்தியா 223 பில்லியன்  டாலர் வரை முதலீடு செய்ய வேண்டும்.
  • ப்ளூம்பெர்க் NEF எனும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டப் புதிய அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் புதைபடிவமற்ற ஆற்றல் திறன் ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகா வாட் (GW) என்ற அளவினை எட்டும்.
  • அதற்குள் நம் நாட்டின் எரிசக்தித் தேவைகளில் 50 சதவீதத்தினை இந்தியா பூர்த்தி செய்யும்.
  • இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தை ஒரு பில்லியன் டன்கள் வரை குறைக்கும்.
  • இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் தனது நாட்டில் நிலவும் கார்பன் செறிவினை 2005 ஆம் ஆண்டின் அளவை விட 45% வரை குறைக்கும்.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியா நிகரச் சுழிஉமிழ்வு என்ற நிலையை அடையும்.
  • இந்தியா ஏற்கனவே 2021 ஆம் ஆண்டிற்குள் 165 GW திறன் அளவிலான புதுப்பிக்கத் தக்க ஆற்றலை நிறுவியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட திறனில் இந்தியா நிலக்கரியைச் சார்ந்திருக்கும் அளவில் 53% என்ற அளவில் இருந்து 2030 ஆம் ஆண்டில் அது 33% ஆகக் குறையும்.
  • 2021 ஆம் ஆண்டில் 23% ஆக இருந்த சூரிய சக்தி மற்றும் காற்று ஆற்றலின் அளவு 51% ஆக இருக்கும்.
  • 2014 முதல் 2021 வரையிலான எட்டு ஆண்டுகளில், 165 ஜிகாவாட் திறன் உள்ள புதுப்பிக்கத் தக்க ஆற்றல் நிலையங்களை நிறுவுவதற்கு இந்தியா ஏற்கனவே சுமார் 75 பில்லியன் டாலர்களைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள், 500 ஜிகாவாட் இலக்கை எட்டுவதற்குத் தற்போது இந்தியா மூன்று மடங்காக 223 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்