2034 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்
May 1 , 2023 576 days 352 0
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பின் (FICCI) தேசிய செயற்குழுக் கூட்டத்தினை தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
‘2030-31 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட ஒரு பொருளாதாரமாக மாற்றச் செய்யும் முயற்சியில் தமிழகத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல்' என்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு - டெலாய்ட் இணைந்து உருவாக்கிய தகவல் கட்டுரையையும் அவர் வெளியிட்டார்.
இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் (மதிப்பு அடிப்படையில்) மூன்றாவது பெரிய சரக்கு ஏற்றுமதியாளராக தமிழ்நாடு மாநிலம் விளங்குகிறது.
தமிழ்நாடு அதன் தற்போதைய 10% சராசரி வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதைக் கருத்தில் கொண்டால், 2034 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இருப்பினும், 2031 ஆம் நிதியாண்டில் இந்த இலட்சிய இலக்கினை அடைவதற்குத் தமிழக மாநிலம் ஆண்டிற்குச் சராசரியாக 16.5% வளர்ச்சியினைக் கொண்டிருக்க வேண்டும்.