சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, 2035 ஆம் ஆண்டில் 1 ஜிகா டன் அளவிற்கும் மேலான ஒட்டுமொத்த CO2 உமிழ்வை நன்கு குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ள ஒரு ஆராய்ச்சிக் குழுவை நிறுவியுள்ளது.
குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட ஆற்றல் மாற்றப் பாதைகளில் இந்தியத் தொழில் துறைகளுக்கு மதிப்புமிக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உதவிகளை வழங்குவதன் மூலம் இந்தியாவின் நிகரப் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு மீதான இலக்கினை நோக்கியப் பயணத்திற்கு ஒரு முக்கியப் பெரும் பங்களிப்பை வழங்குவதை இந்தக் கூட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய அரசின் ‘சிறந்த நிறுவனங்கள்’ என்ற முன்னெடுப்பின் ஒரு நிதியுதவியுடன், சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இந்த ஆராய்ச்சிக் குழு நிறுவப் பட்டது.