2040 முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை: பிரிட்டன் முடிவு
July 27 , 2017 2725 days 1050 0
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் விதமாக, வரும் 2040-ஆம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களையும் , வேன்களையும் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் பிரிட்டன் சாலைகளில் தென்படக்கூடாது, என்பதே இதன் நோக்கமாகும் .
அதற்கேற்ப, வரும் 2040-ஆம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களையும், வேன்களையும் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படும்.புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் வகையில், காற்றில் நைட்ரஜன் டையாக்ஸைடு கலப்பதைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தடை விதிக்கப்படும். ஏற்கெனவே, பிரான்ஸ் அரசு இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், பிரிட்டன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மட்டுமன்றி, எரிபொருள்களுடன் மின்சாரத்திலும் இயங்கக் கூடிய 'ஹைப்ரிட்' கார்களுக்கும் தடை விதிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.