TNPSC Thervupettagam

2041 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலைத் தன்மை கொண்ட சுற்றுலா தலம்

November 15 , 2022 614 days 288 0
  • மதுரா-பிருந்தாவனம் ஆனது 2041 ஆம் ஆண்டிற்குள் "நிகர சுழியக் கார்பன் உமிழ்வு" கொண்ட சுற்றுலா தலமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதனால் பிராஜ் பகுதி முழுவதும் சுற்றுலா வாகனங்கள் இயங்கத் தடை செய்யப் படும்.
  • பிருந்தாவனம் மற்றும் கிருஷ்ண ஜென்மபூமி போன்ற சில புகழ் பெற்ற யாத்திரை மையங்கள் இப்பகுதியினுள் அடங்கும்.
  • அதற்கு மாறாக, பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்கள் மட்டுமே அப்பகுதிக்குள் அனுமதிக்கப்படும்.
  • இப்பகுதியில் உள்ள அனைத்து 252 நீர்நிலைகள் மற்றும் 24 காடுகளும் புணரமைக்கப் படும்.
  • இந்தப் பிராந்தியத்தின் எட்டு முக்கிய நகரங்களும் உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் குறுகிய-அகல இரயில் பாதை மூலம் இணைக்கப்படும்.
  • மதுரா மற்றும் பிருந்தாவன் ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் தற்போதைய 12.9 கிமீ குறுகிய இரயில் பாதையானது மீண்டும் மேம்படுத்தப்படும்.
  • நிகர சுழியக் கார்பன் உமிழ்வானது கார்பன் நடுநிலை என்று குறிப்பிடப்படுகிறது.
  • இதன் பொருள் ஒரு நாடு/மாநிலம் அதன் உமிழ்வை சுழிய நிலை அளவிற்குக் குறைக்கும் என்பதல்ல.
  • அதன் பொருள், ஒரு நாட்டின்/மாநிலத்தின் உமிழ்வுகள் ஆனது, வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களை உறிஞ்சி அகற்றுவதன் மூலம் ஈடுசெய்யப்படும் ஒரு நிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்