TNPSC Thervupettagam

2045 ஆம் ஆண்டில் புற்றுநோய்ப் பாதிப்புகள்

October 22 , 2024 34 days 70 0
  • இந்தியாவில் 2022 மற்றும் 2045 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 2020 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளதோடு மேலும் அந்த புற்றுநோய் பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • இந்தியாவில் ஆண்கள் மத்தியில், வாய்ப் புற்றுநோய், குறிப்பாக உதடு மற்றும் தொண்டைப் புற்றுநோய்கள் பொதுவாகப் பரவக் கூடிய புற்றுநோய்களாகும்.
  • பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் ஆனது முதன்மையாகப் பரவக்கூடிய புற்று நோயாக உள்ளதோடு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் ஒரு முக்கிய அபாயமாக உள்ளது.
  • இதற்கிடையில், சீனாவில் பெண்கள் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் அதிகளவில் பரவக் கூடிய ஒன்றாக உள்ளது.
  • உலகளாவிய புற்றுநோய் தொடர்பான உயிரிழப்புகளில் BRICS நாடுகள் 42% பங்கினை கொண்டுள்ளது.
  • 28 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிகபட்ச மொத்த உற்பத்தி இழப்பைச் சீனா எதிர் கொண்டுள்ளது.
  • தென்னாப்பிரிக்காவானது ஒரு புற்றுநோய் உயிரிழப்பிற்கு என அதிகபட்சமாக 101,000 டாலர் செலவினத்தினை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்