TNPSC Thervupettagam

2047 ஆம் ஆண்டிற்குள் ஆறு மாபெரும் துறைமுகங்கள் உருவாக்கம்

March 7 , 2024 266 days 355 0
  • இந்தியா தனது இலட்சிய மிக்க கடல் சார் செயல்பாடுகள் விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக 2047 ஆம் ஆண்டிற்குள் ஆறு மாபெரும் துறைமுகங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2047 ஆம் ஆண்டில் அமிர்த காலம் என்ற குறிக்கோளில் குறிப்பிட்டுக் காட்டப் பட்டுள்ள துறைமுகங்களின் சரக்குப் பொருட்கள் கையாளும் திறனை கணிசமாக அதிகரிக்கும்.
  • இந்தத் துறைமுகங்கள் உருவாக்கம் ஆனது பின்வரும் இரண்டு வகை பிரிவுகளில் கவனம் செலுத்தும்.
  • ஆண்டிற்கு 500 மில்லியன் டன்களுக்கு மேலான சரக்குப் பொருட்களை கையாளும் திறன்
    • தீன்தயாள் மற்றும் டுனா டெக்ரா துறைமுகத் தொகுதி (குஜராத்)
    • ஜவஹர்லால் நேரு - வாதவன் துறைமுகத் தொகுதி (மகாராஸ்டிரா)
  • ஆண்டிற்கு 300 மில்லியன் டன்களுக்கு மேலான சரக்குப் பொருட்களை கையாளும் திறன்
    • கொச்சி - விழிஞ்சம் துறைமுகத் தொகுதி (கேரளா)
    • கலாத்தியா தெற்கு விரிகுடா துறைமுகம் (அந்தமான்)
    • சென்னை - காமராஜர் - கடலூர் துறைமுகத் தொகுதி (தமிழ்நாடு)
    • பாராதீப் மற்றும் இதர சிறு துறைமுகங்கள் (ஓடிஸா).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்