TNPSC Thervupettagam

2047 ஆம் ஆண்டில் 26 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரம்

January 26 , 2023 668 days 386 0
  • 2047 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் தனிநபர் வருமானம் ஆனது, 15,000 அமெரிக்க டாலர்களை எட்ட உள்ளதன் மூலம் 26 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கொண்ட பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • எர்ன்ஸ்ட் & யங்ஸ் என்ற உலக ஆலோசனை சேவை வழங்கீட்டு நிறுவனத்தின் அறிக்கையில் இத்தகவலானது தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவை FY23 ஆம் ஆண்டில் 6.8% வளர்ச்சி இருக்கும் என்றும், அதே சமயம் உலக வங்கியானது 6.9% வளர்ச்சி இருக்கும் என்றும் கணித்துள்ளது.
  • இலண்டனில் அமைந்துள்ள ஐஎச்எஸ் மார்கிட் என்ற நிறுவனமானது, 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பினை எட்டும் என்று கணித்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டினைப் பின்னுக்கு தள்ளி ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவானது ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் மதிப்பினை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா ஆறாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்