இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையானது, 2047 ஆம் ஆண்டில் இந்திய வேளாண்மை - நிலையான மேம்பாட்டிற்காக வேண்டிய கொள்கைகளை மறுவடிவமைத்தல் என்ற தலைப்பிலான ஒரு கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
2047 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உணவுத் தேவையானது, தற்போதைய தேவையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், தோட்டக்கலை மற்றும் விலங்குத் தீவனங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுக்கான தேவையானது மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த நன்கு அதிகரித்த உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான வேளாண் நிலம் ஆனது, தற்போதைய 180 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலிருந்து 176 மில்லியன் ஹெக்டேர் (mha) ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய உணவுப் பொருட்களிலிருந்து வளங்களை மிகவும் ஒரு மாறுபட்ட மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களுக்கு மாற்றுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
2047 ஆம் ஆண்டிற்குள் இந்திய நாட்டுப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு ஆண்டிற்குத் தோராயமாக எட்டு சதவீத வளர்ச்சி தேவைப்படும்.
அதே நேரத்தில், சுமார் பாதி எண்ணிக்கையிலான இந்தியர்கள் நகர்ப்புறங்களில் வசிப்பதுடன் நாட்டின் மக்கள் தொகை 1.6 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வேளாண் உற்பத்தியின் மொத்த மதிப்பில் கால்நடைகளின் பங்களிப்பு தற்போதைய 31 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாகவும், மீன்வளத்தின் பங்களிப்பு 7 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும் அதிகரிக்குமென கணிப்புகள் தெரிவிக்கின்றன.