TNPSC Thervupettagam

2050 ஆம் ஆண்டில் மூட்டழற்சி பாதிப்பு

September 1 , 2023 323 days 209 0
  • 2050 ஆம் ஆண்டில், உலகளவில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் மூட்டழற்சி பாதிப்பினைக் கொண்டிருப்பர் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • தற்போது, 30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதிலான உலக மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் மூட்டழற்சிப் பாதிப்பினால் அவதியுறுகின்றனர்.
  • 2020 ஆம் ஆண்டில், 595 மில்லியன் மக்கள் மூட்டழற்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இது 1990 ஆம் ஆண்டில் 256 மில்லியன் ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கையை விட 132 சதவீதம் அதிகமாகும்.
  • 1990 ஆம் ஆண்டில், மூட்டழற்சியினால் ஏற்படும் 16 சதவீத உடல் இயலாமைக்கு உடல் பருமன் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில் இது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில், பெண்களில் 61 சதவீதமும், ஆண்களில் 39 சதவீதமும் மூட்டழற்சிப் பாதிப்புகள் பதிவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்