TNPSC Thervupettagam

2௦வது காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாடு

March 2 , 2018 2332 days 754 0
  • அண்மையில்  பிஜி (FIJI) நாட்டில் நடி (Nadi) எனும் இடத்தில் 20 ஆவது காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாடு  நடைபெற்றது.
  • இந்த 20வது காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாட்டின் கருத்துரு “நீடித்த தன்மை மற்றும் மீள்திறன் ஆகியவற்றை கல்வியால் வழங்க முடியுமா? (Sustainability and Resilience: Can Education Deliver?)
  • 2030ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டி இலக்கிடப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goal – SDG) உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் நடத்தப்படும் முதல் காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாடு  இதுவேயாகும்.
  • காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பைத் தொடர்ந்து (Commonwealth heads of Government Meeting) காமன்வெல்த் செயலகத்தால்  (Commonwealth Secretariat) ஒருங்கிணைக்கப்படும் காமன்வெல்த் நாடுகளுக்கான  இரண்டாவது பெரிய மாநாடு இதுவாகும்.
  • இந்த 20வது காமன்வெல்த் கல்வி அமைச்சகர்கள்   மாநாட்டில்  நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு  கல்வி அத்தியாவசியமான, தவிர்க்க முடியாத ஒரு அம்சம் எனவும், கல்வி ஒவ்வொருடைய அடிப்படை மனித  உரிமை (fundamental human right) எனவும் மறுஉறுதி  செய்யப்பட்டது.
  • காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாட்டோடு சேர்த்து    ஒருங்கிணைந்த கூட்டளிப்பாளர்கள் மன்றத்தின் சந்திப்பும் (Integrated Partners Forum – IPF) பிஜியில்  நடைபெற்றது.
  • அடுத்த 21வது காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை 2021 ஆம் ஆண்டில் கென்யா நடத்த உள்ளது
  • 1959 ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
  • இதன் முதல் மாநாடு 1959-ல் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்