அண்மையில் பிஜி (FIJI) நாட்டில் நடி (Nadi) எனும் இடத்தில் 20 ஆவது காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.
இந்த 20வது காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாட்டின் கருத்துரு “நீடித்த தன்மை மற்றும் மீள்திறன் ஆகியவற்றை கல்வியால் வழங்க முடியுமா? (Sustainability and Resilience: Can Education Deliver?)
2030ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டி இலக்கிடப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goal – SDG) உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் நடத்தப்படும் முதல் காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாடு இதுவேயாகும்.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பைத் தொடர்ந்து (Commonwealth heads of Government Meeting) காமன்வெல்த் செயலகத்தால் (Commonwealth Secretariat) ஒருங்கிணைக்கப்படும் காமன்வெல்த் நாடுகளுக்கான இரண்டாவது பெரிய மாநாடு இதுவாகும்.
இந்த 20வது காமன்வெல்த் கல்வி அமைச்சகர்கள் மாநாட்டில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு கல்வி அத்தியாவசியமான, தவிர்க்க முடியாத ஒரு அம்சம் எனவும், கல்வி ஒவ்வொருடைய அடிப்படை மனித உரிமை (fundamental human right) எனவும் மறுஉறுதி செய்யப்பட்டது.
காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாட்டோடு சேர்த்து ஒருங்கிணைந்த கூட்டளிப்பாளர்கள் மன்றத்தின் சந்திப்பும் (Integrated Partners Forum – IPF) பிஜியில் நடைபெற்றது.
அடுத்த 21வது காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை 2021 ஆம் ஆண்டில் கென்யா நடத்த உள்ளது
1959 ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதன் முதல் மாநாடு 1959-ல் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் நடத்தப்பட்டது.