TNPSC Thervupettagam

20வது IORA அமைப்பின் அமைச்சர்கள் குழு

December 24 , 2020 1356 days 555 0
  • இந்தியக் கடலோர நாடுகள் கூட்டமைப்பின் (Indian Ocean Rim Association - IORA) அமைச்சர்கள் குழுவின் 20வது சந்திப்பானது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டது.
  • இந்தக் காணெலி வாயிலான சந்திப்பில் அனைத்து 22 உறுப்பு நாடுகளும் மற்றும் 10 பங்காளர் நாடுகளும் கலந்து கொண்டன.
  • இந்தச் சந்திப்பின் கருத்துரு, ”இந்தியப் பெருங்கடலில் பகிரப்பட்ட விதி மற்றும் வாய்ப்புகளுக்கான ஒரு பாதையை ஊக்குவித்தல்என்பதாகும்.
  • இலங்கையானது 2021-23 காலக் கட்டத்திற்கான IORA அமைப்பின் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டது.
  • இந்தச் சந்திப்பின் போது பிரான்சு நாடானது IORA அமைப்பின்  23வது உறுப்பு நாடாக இணைக்கப் பட்டது.
  • IORA ஆனது 1997 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது. இதன் தலைமையகம் மொரீஷியலின் எபீனில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்