TNPSC Thervupettagam

20வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு

September 16 , 2023 310 days 200 0
  • 20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு ஆனது சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்றது.
  • இது "ஆசியான் விவகாரங்கள்: வளர்ச்சியின் மையம்" என்ற கருத்துருவுடன் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டில் இந்தியா - ஆசியான் ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதற்கான 12 அம்ச முன்மொழிதலை இந்தியப் பிரதமர் அவர்கள் முன்வைத்தார்.
  • இது இணைப்பு, எண்ணிம மாற்றம், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாடு, சமகாலத்திய சவால்களை எதிர்கொள்வது, மக்களிடையேயான தொடர்புகள் மற்றும் உத்திசார் ஈடுபாட்டினை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இந்தியாவின் எண்ணிமப் பொது உள்கட்டமைப்பு கட்டமைப்பினை ஆசியான் அமைப்பின் பங்குதாரர் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா முன்வந்துள்ளது.
  • மேலும், எண்ணிம பரிமாற்றம் மற்றும் நிதி சார் இணைப்பு நுட்பங்களில் ஒத்துழைப்பு மேற்கொள்வதை மையமாகக் கொண்ட எண்ணிம உலகின் எதிர்காலத்திற்கான ஆசியான்-இந்தியா நிதியை உருவாக்க உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
  • உலக சுகாதார அமைப்பினால் இந்தியாவில் நிறுவப்படும் உலக பாரம்பரிய மருத்துவ மையத்தில் இணைவதற்கு ஆசியான் நாடுகளுக்குப் பிரதமர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.
  • பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பிற்கான கூட்டணியில் இணைவதற்கும் ஆசியான் நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்த நிலையில், பேரிடர் மேலாண்மையில் முக்கிய ஒத்துழைப்பினை நல்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • ஜன்-ஔஷதி கேந்திராக்கள் மூலம் மக்களுக்கு விலை மலிவான மற்றும் தரமான மருந்துகளை வழங்குவதில் இந்தியாவின் அனுபவத்தினை அந்நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்தியா முன்வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்