உலக மனநல கூட்டமைப்பானது (WFMH) கேரிங் பவுண்டேஷன் மற்றும் தில்லியில் உள்ள பிற நிறுவனங்களுடன் இணைந்து 21-வது உலக மன நல மாநாட்டை புதுதில்லியில் நடத்தியது. இந்த மாநாட்டை இந்திய குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார்.
இந்த மாநாடு முதன் முறையாக இந்தியாவில் நடக்கிறது.
தேசிய மனநல ஆய்வு 2016 அறிக்கையின் படி இந்தியாவில் 14 சதவீத மக்களுக்கு தகுந்த மனநலம் சார்ந்த சிகிச்சைகள் தேவைப்படுவதாகக் கண்டறிந்த பிறகு இந்தியாவில் இது நடத்தப்படுகிறது.
இந்த மாநாடு யோகா, தியானம் மற்றும் மனநலத்திற்கான மரபு சார்ந்த அணுகுமுறைகள் போன்றவை மீது சிறப்பு அமர்வுகள் கொண்டிருக்கும்.