TNPSC Thervupettagam

21வது இந்தியப் பறவைகள் கண்காட்சி ஜெய்ப்பூர்

February 12 , 2018 2349 days 774 0
  • இந்திய சுற்றுலாத்துறை மற்றும் வனவிலங்கு சமூகம் (The Tourism and Wildlife Society of India), இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள மான் சாகர் ஏரியில் 21வது இந்தியப் பறவைகள் கண்காட்சியை ஏற்பாடு செய்தது.
  • இந்த வருடம், இந்தக் கண்காட்சியானது ஜெய்ப்பூரில் அரிதாகவும் அழியுந்தருவாயிலும் உள்ள வெண்கழுத்துப் பட்டாணிக் குருவிகளுக்கு (White napped tit bird) சமர்ப்பிக்கப்பட்டது.

வெண்கழுத்துப் பட்டாணிக் குருவிகள் (White Napped tit - Machlolophus nuchalis)

  • இந்த வெண்கழுத்துப் பறவையானது உறுதித்தன்மை உடைய, வலுவான அமைப்பைக் கொண்ட முக்கியமாக பக்கவாட்டிலும் மார்பகங்களிலும் மஞ்சள் நிறத்தைக் கொண்ட கருப்பு-வெள்ளை நிற பறவையாகும்.
  • வெண்கழுத்துப் பட்டாணிக் குருவியானது (White napped tit - மச்வோலோபஸ் நூச்சாலிஸ் - Machlolophus nuchalis) இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இது, மேற்கு இந்தியா மற்றும் தென்னிந்தியா என்று இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் உலர்ந்த முள் புதர் காடுகளில் காணப்படுகிறது.
  • இந்தப் பறவையானது உதய்ப்பூரிலும் கட்ச்-ன் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
  • இந்தப் பறவையை பொருத்தமான வாழ்விடப் பற்றாக்குறையின் காரணமாக அழிவின் விளிம்பில் உள்ள பறவையாக இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature - IUCN) வகைப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்