22வது FIFA ஆடவர் உலகக் கோப்பை போட்டியானது (2022) நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை கத்தாரில் நடைபெறவுள்ளது.
அரபு நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் உலகக் கோப்பை போட்டி இதுவாகும்.
குளிர்காலத்தில் நடத்தப்படும் முதல் போட்டி மற்றும் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 2002 ஆம் ஆண்டு போட்டிக்குப் பிறகு, ஆசியாவில் நடத்தப் படும் இரண்டாவது FIFA உலகக் கோப்பை போட்டி இது ஆகும்.
கத்தார் அரசானது இதற்காக அனைத்து மைதானங்களையும் புதிதாகக் கட்டமைக்க வேண்டியிருந்ததால், இந்த ஆண்டுப் போட்டியானது மிகவும் செலவுமிக்க உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒன்றாகும்.
உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவதற்கான மொத்தச் செலவு சுமார் 220 பில்லியன் டாலர் ஆகும்.
FIFA உலகக் கோப்பைப் போட்டிக்காக இதுவரை எந்தவொரு நாடும் செலவிடாத அளவிற்கான மிகப்பெரிய தொகை இதுவாகும்.
கத்தார் உலகக் கோப்பைப் போட்டியானது (2022) புதிய விதிகள் மற்றும் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப் படுத்த உள்ளது.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஐந்து மாற்று விதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
"பகுதியளவு தானியங்கிமயமான ஆஃப்சைடு தொழில்நுட்பம்' இந்தப் போட்டித் தொடரில் பயன்படுத்தப்பட்டது.
பந்து கோல் கோட்டினைத் தாண்டியதா என்பதைக் கண்டறிய இது உதவும்.