TNPSC Thervupettagam

22-வது ஆசிய ஒத்திசைவுக்கான செயற்குழு மாநாடு

December 9 , 2017 2415 days 710 0
  • மத்திய ஆரோக்கிய மற்றும் குடும்பநல இணை அமைச்சர் அண்மையில் 22-வது ஆசிய ஒத்திசைவுக்கான செயற்குழு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
  • ஆசியாவில் மருத்துவ பொருட்களின் ஒழுங்குமுறையில் ஒருங்கிணைவு மற்றும் ஒத்திசைவைக்கான அணுகுமுறைகளை உருவாக்கவும், அவற்றினை பரிந்துரைக்கவும் இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தோடு இணைந்து தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தேசிய மருந்துப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகியவை இம்மாநாட்டை நடத்தியுள்ளது.
  • ஆசிய ஒத்திசைவுக்கான செயற்குழு ஆனது 1999 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, இது மருத்துவ தொழிற்துறை சார்ந்த உறுப்பினர்கள், 30 நாடுகளின் தேசிய மருந்துப் பொருட்களின் ஒழுங்குமுறை ஆணையங்களை உறுப்பினராகக் கொண்ட தன்னார்வ, இலாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
  • சர்வதேச மருத்துவ சாதனங்களின் ஒழுங்குமுறை மன்றத்தின் (by International Medical Device Regulators Forums)  வழிகாட்டல்களின் வழியே ஆசியா மற்றும் பிற பிராந்திய பகுதிகளில் மருத்துவ சாதனங்களின் ஒத்திசைவு ஒழுங்குமுறையை இது ஊக்குவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்