மத்திய ஆரோக்கிய மற்றும் குடும்பநல இணை அமைச்சர் அண்மையில் 22-வது ஆசிய ஒத்திசைவுக்கான செயற்குழு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
ஆசியாவில் மருத்துவ பொருட்களின் ஒழுங்குமுறையில் ஒருங்கிணைவு மற்றும் ஒத்திசைவைக்கான அணுகுமுறைகளை உருவாக்கவும், அவற்றினை பரிந்துரைக்கவும் இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தோடு இணைந்து தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தேசிய மருந்துப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகியவை இம்மாநாட்டை நடத்தியுள்ளது.
ஆசிய ஒத்திசைவுக்கான செயற்குழு ஆனது 1999 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, இது மருத்துவ தொழிற்துறை சார்ந்த உறுப்பினர்கள், 30 நாடுகளின் தேசிய மருந்துப் பொருட்களின் ஒழுங்குமுறை ஆணையங்களை உறுப்பினராகக் கொண்ட தன்னார்வ, இலாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
சர்வதேச மருத்துவ சாதனங்களின் ஒழுங்குமுறை மன்றத்தின் (by International Medical Device Regulators Forums) வழிகாட்டல்களின் வழியே ஆசியா மற்றும் பிற பிராந்திய பகுதிகளில் மருத்துவ சாதனங்களின் ஒத்திசைவு ஒழுங்குமுறையை இது ஊக்குவிக்கின்றது.