TNPSC Thervupettagam

22வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் அரசத் தலைவர்களின் உச்சி மாநாடு

September 19 , 2022 673 days 367 0
  • 22வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் அரசத் தலைவர்களின் உச்சி மாநாடானது சமர்கண்டில் நடைபெற்றது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது தனது முதலாவது நேரடி உச்சி மாநாட்டை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடத்தியது.
  • உஸ்பெகிஸ்தான் அரசானது எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுழற்சி முறையிலான தலைமைப் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தது.
  • இந்த உச்சி மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2022-2023 ஆண்டிற்கான முதலாவது சுற்றுலா மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக வாரணாசி நகரம் பெயரிடப் பட்டுள்ளது.
  • இது இந்தியா மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகளுக்கு இடையே சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மனிதாபிமானம் சார்ந்தத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவிக்கும்.
  • அந்த அமைப்பின் தலைவராக இந்தியா 2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்