23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்தப் போட்டி - 2024
November 3 , 2024 26 days 109 0
இந்தப் போட்டியில் இந்தியா ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளது.
சிராக் சிக்கரா 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன் என்றப் பெருமையினைப் பெற்றார்.
பாரீசு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் செஹ்ராவத்துக்குப் பிறகு, U23 சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்றப் பெருமையினை இவர் பெற்றுள்ளார்.
இதில் பங்கேற்பு அணிகளின் தரவரிசையில் 158 புள்ளிகளுடன் ஈரான் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ஜப்பான் (102), அஜர்பைஜான் (100) மற்றும் ஐனிடா (82) ஆகிய நாடுகளும் உள்ளன.
இந்திய மகளிர் மல்யுத்த அணியும் சிறப்பானப் பங்கேற்பினை வழங்கி, ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
59 கிலோ எடைப் பிரிவில் அஞ்சலி வெள்ளிப் பதக்கத்தினையும், நேஹா ஷர்மா (57 கிலோ எடைப் பிரிவு), ஷிக்சா (65 கிலோ எடைப் பிரிவு), மோனிகா (68 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.