சரக்கு மற்றும் சேவைகள் வரி ஆணையத்தால் (GST – Goods and Services Tax) திரைப்பட நுழைவுச் சீட்டுகள், தொலைக்காட்சி மற்றும் கணினி திரைகள் (monitor) உள்ளிட்ட 23 பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவைகள் வரியானது குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சரக்கு மற்றும் சேவைகள் வரி விகிதமானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது.