TNPSC Thervupettagam

23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்தப் போட்டி - 2024

November 3 , 2024 69 days 170 0
  • இந்தப் போட்டியில் இந்தியா ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளது.
  • சிராக் சிக்கரா 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன் என்றப் பெருமையினைப் பெற்றார்.
  • பாரீசு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் செஹ்ராவத்துக்குப் பிறகு, U23 சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்றப் பெருமையினை இவர் பெற்றுள்ளார்.
  • இதில் பங்கேற்பு அணிகளின் தரவரிசையில் 158 புள்ளிகளுடன் ஈரான் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ஜப்பான் (102), அஜர்பைஜான் (100) மற்றும் ஐனிடா (82) ஆகிய நாடுகளும் உள்ளன.
  • இந்திய மகளிர் மல்யுத்த அணியும் சிறப்பானப் பங்கேற்பினை வழங்கி, ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
  • 59 கிலோ எடைப் பிரிவில் அஞ்சலி வெள்ளிப் பதக்கத்தினையும், நேஹா ஷர்மா (57 கிலோ எடைப் பிரிவு), ஷிக்சா (65 கிலோ எடைப் பிரிவு), மோனிகா (68 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்