கொடுமணல் தொல்லியல் ஆய்வு தளத்தில் முதல் முறையாக 2,300 ஆண்டுகள் பழமையான படிக்கிணறு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
வசிப்பிடமாகவும் தொழிற்தளமாகவும் திகழ்ந்த இந்த இடமானது ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலை ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ளது.
சென்னிமலையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடமானது நொய்யலாற்றின் கரையில் உள்ளது.
1981 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட முந்தைய தொல்லியல் ஆய்வுகள், மணிகள் மற்றும் அரிய கற்கள் தயாரிக்கப்பட்ட ஒரு தொழிற்துறை வளாகம் இங்கு இருந்ததைத் தெளிவுபடுத்தியுள்ளன.