TNPSC Thervupettagam

23வது SCO CHS உச்சி மாநாடு

July 12 , 2023 375 days 242 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசத் தலைவர்கள் சபையின் (CHS) 23வது உச்சி மாநாடானது சமீபத்தில் நடைபெற்றது.
  • இந்த உச்சி மாநாடானது முதல் முறையாக இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது.
  • இந்த ஆண்டு உச்சி மாநாட்டின் கருத்துருவான “Secure” என்பது ‘பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், இணைப்பு, ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான மதிப்பு மற்றும் சுற்றுச்சூழல்’ ஆகியவற்றைக் குறிக்கிறது.
  • பிராந்தியப் பாதுகாப்பு, வளம் மற்றும் பிராந்தியத்துடனான மேம்பட்ட ஈடுபாடு ஆகியவை குறித்து இந்த உச்சி மாநாட்டில் மகத்தான முக்கியத்துவம் வழங்கப் பட்டு உள்ளது.
  • பாரம்பரிய மருத்துவம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கங்கள் குறித்தச் சிறப்புப் பணிக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஆகிய இரண்டு புதிய SCO வழி முறைகள் இந்த உச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இவை இந்தியாவின் தலைமையில் மற்றும் இந்திய நாட்டினால் உருவாக்கப்பட்டன.
  • இந்த ஆண்டில், இந்திய நாட்டின் தலைமைத்துவத்தின் கீழ் ஈரான் இந்த அமைப்பின் முழு நேர உறுப்பினர் ஆனது.
  • கஜகஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள இந்தக் குழுவின் அடுத்த சந்திப்பில் பெலாரஸ் நாடானது ஒரு முழு அளவிலான உறுப்பினர் அந்தஸ்தினைப் பெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்