TNPSC Thervupettagam

23வது இருவாட்சிப் பறவை திருவிழா

December 6 , 2022 593 days 496 0
  • 23வது இருவாட்சிப் பறவை திருவிழா (2022) நாகாலாந்தில் உள்ள நாகா மக்களின் பாரம்பரியக் கிராமமான கிசாமாவில் தொடங்க உள்ளது.
  • இது 'பண்டிகைகளின் திருவிழா' என்றும் பிரபலமாக அறியப் படுவதோடு,  நாகாலாந்தின் வளமான கலாச்சாரத்தை இது வெளிப்படுத்துகிறது.
  • குழிந்த தலை கொண்ட இருவாட்சி எனவும் அழைக்கப்படும் இப்பறவை (ஹார்ன்பில்) ஒரு இந்தியப் பறவையாகும்.
  • இது இருவாட்சிப் பறவை குடும்பத்தின் மாபெரும் உறுப்பின இனங்களுள் ஒன்றாகும் என்பதோடு இது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசிய ஆகியப் பகுதிகளில் காணப் படுகிறது.
  • இந்தப் பறவை அந்தப் பழங்குடியினரின் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும் என்பதோடு, அதன் அளவு மற்றும் நிறத்திற்காக இந்தப் பறவை பிரபலமாக அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்