TNPSC Thervupettagam

24வது ஹார்ன்பில் திருவிழா

December 15 , 2023 383 days 251 0
  • நாகாலாந்தின் பாரம்பரிய கிராமமான கிசாமாவில் பத்து நாட்கள் அளவிலான 24வது ஹார்ன்பில் (இருவாச்சி) திருவிழா நடைபெற்றது.
  • அம்மாநிலத்தின் 16 முக்கியப் பழங்குடியினர் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.
  • 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திருவிழா ஹார்ன்பில் என்ற இருவாச்சி பறவையின் பெயரால் இப்பெயர் பெற்றது.
  • இது நாகா நாட்டுப்புறவியல் மற்றும் சடங்குகளில் உள்ள நம்பகத்தன்மை, அழகு மற்றும் கருணை ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பறவை ஆகும்.
  • அம்மாநிலத்தில் 16 மாவட்டங்கள் மற்றும் 17 பழங்குடியினங்கள் உள்ள நிலையில் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டவை.
  • நாகாலாந்து மாநிலம் திருவிழாக்களின் நிறைந்த பகுதி என்றும் ஹார்ன்பில் திருவிழாவானது திருவிழாக்களின் திருவிழா என்றும் குறிப்பிடப்படுகிறது.
  • நாகாலாந்து சாராத திருவிழா பார்வையாளர்கள் உள்ளூர் அரசாங்கத்திடம் பாதுகாக்கப் பட்ட பகுதியில் பயணிப்பதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்