TNPSC Thervupettagam

24வது SCO உச்சி மாநாடு

July 8 , 2024 11 days 155 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 2024 ஆம் ஆண்டு உச்சி மாநாடு கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டில் அஸ்தானா பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதோடு மேலும், ஆற்றல், பாதுகாப்பு, வர்த்தகம், நிதி மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பான 25 உத்தி சார் ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 10வது உறுப்பினர் நாடாக பெலாரஸ் இடம் பெற்றுள்ளது.
  • ஷாங்காய் 5 அமைப்பானது 1996 ஆம் ஆண்டில் 5 உறுப்பினர்களுடன் உருவானது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது 2001 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று ஷாங்காய் நகரில் நிறுவப் பட்டதோடு, உஸ்பெகிஸ்தானை அந்த அமைப்பின் ஆறாவது உறுப்பினராக இணைத்தது.
  • ஆப்கானிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகியவை பார்வையாளர் நாடுகள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்