மகாராஷ்டிரா மாநில அரசானது “1926” எனும் எண்ணில் அனைத்து நேரத்திய (24 X 7) வனப்பாதுகாப்பு உதவிமைய எண் (ஹெல்ப் லைன்) சேவையை தொடங்கியுள்ளது.
இந்த ஹெல்ப் லைன் எண்ணைப் பயன்படுத்தி தங்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்காமல் (anonymously) வனங்களில் மரம் வெட்டுதல், வேட்டையாடுதல் போன்றவற்றைப் புரியும் பிறருடைய சட்ட விரோத செயல்களைப் பற்றி வழக்கு பதிவு செய்யலாம் அல்லது வனம் மற்றும் வனஉயிர்கள் தொடர்புடைய பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
வனத்துறை தொடர்பான தங்களது பொது மற்றும் அவசரகால சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை களைவதற்காக நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள முதல் 24X7 ஹெல்ப்லைன் சேவை வசதி இதுவேயாகும்.