வருடாந்திர கடவுச் சீட்டு குறியீட்டின்படி, சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் 165 நாடுகளை அணுகக் கூடிய வசதியோடு உலகின் மிகச் சக்தி வாய்ந்த கடவுச் சீட்டைப் பெற்றுள்ளன.
இந்த முடிவுகள் குடிமக்களுக்கென்று திட்டமிடும் நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தின் வருடாந்திர கடவுச் சீட்டின் ஒரு பகுதியாகும்.
சமீபத்திய உலக கடவுச் சீட்டு குறியீட்டில் உலக அளவில் இந்திய கடவுச் சீட்டானது 66வது இடத்தில் உள்ளது.
இந்தக் குறியீடானது கடவுச்சீட்டின் நுழைவு இசைவு இல்லா மதிப்பீட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது கடவுச்சீட்டினைக் கொண்டோருக்கு 66 நாடுகளுக்கு நுழைவு இசைவு இல்லா அணுகலைத் தருகின்றது.
இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் கடைசி இடத்திற்கு முந்தைய இடங்களில் உள்ளன.