நாகாலாந்தின் பாரம்பரிய கிராமமான கிசாமாவில் பத்து நாட்கள் அளவிலான 24வது ஹார்ன்பில் (இருவாச்சி) திருவிழா நடைபெற்றது.
அம்மாநிலத்தின் 16 முக்கியப் பழங்குடியினர் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.
2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திருவிழா ஹார்ன்பில் என்ற இருவாச்சி பறவையின் பெயரால் இப்பெயர் பெற்றது.
இது நாகா நாட்டுப்புறவியல் மற்றும் சடங்குகளில் உள்ள நம்பகத்தன்மை, அழகு மற்றும் கருணை ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பறவை ஆகும்.
அம்மாநிலத்தில் 16 மாவட்டங்கள் மற்றும் 17 பழங்குடியினங்கள் உள்ள நிலையில் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டவை.
நாகாலாந்து மாநிலம் திருவிழாக்களின் நிறைந்த பகுதி என்றும் ஹார்ன்பில் திருவிழாவானது திருவிழாக்களின் திருவிழா என்றும் குறிப்பிடப்படுகிறது.
நாகாலாந்து சாராத திருவிழா பார்வையாளர்கள் உள்ளூர் அரசாங்கத்திடம் பாதுகாக்கப் பட்ட பகுதியில் பயணிப்பதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.