முக்கியமான பருவமழை மாதங்களான இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்கள், கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா கண்ட மிகவும் ஈரப்பதம் மிக்க மாதங்களாகும்.
இந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் பெய்த மழைப் பொழிவானது இயல்பை விட 10% அதிகமாக உள்ளது. இது 1994க்குப் பிறகு பெய்த மிக அதிக மழைப் பொழிவாகும்.
2010க்குப் பிறகு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா முழுவதும் மழை பெய்தது இதுவே முதல் முறையாகும். கடந்த 25 ஆண்டுகளில் இவ்வாறு மழை பெய்தது இது இரண்டாவது முறையாகும்.