கோவிட் - 19 நோய்த் தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் தேவையானது கடந்த 25 ஆண்டு காலத்தில் தற்பொழுது ஒரு மிகக் குறைந்த அளவாக 446.4 டன்களாக உள்ளது.
இது 2019 ஆம் ஆண்டில் 690.4 டன்களாக இருந்தது.
2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் மொத்த அணிகலன் தேவையானது 42% என்ற அளவில் குறைந்து 315.9 டன்களாக உள்ளது.
இது 2019 ஆம் ஆண்டில் 544.6 டன்களாக இருந்தது.
ஒரு ஆண்டிற்கான மொத்த முதலீட்டுத் தேவையானது 130.4 டன்களாக, 11% என்ற அளவில் குறைந்துள்ளது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 145.8 டன்களாக இருந்தது.
2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத் தேவையானது மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.