TNPSC Thervupettagam

25,000 கோடி சந்தைக் கடன்கள்

July 6 , 2023 509 days 269 0
  • 2024 ஆம் ஆண்டு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) சந்தைக் கடன்களின் மூலம் 25,000 கோடி ரூபாய் அளவில் நிதி திரட்டுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • இது மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDL) எனப்படுகின்ற, பத்திரங்கள் ஏலத்தின் மூலம் சந்தையில் இருந்து கடன்கள் பெறும் ஒரு செயல்முறையாகும்.
  • 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி, 2023-24 ஆம் ஆண்டில் மொத்தமாக 1,43,197.93 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • இது 51,331.79 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த உள்ளது.
  • நிகரக் கடன்கள் 91,866.14 கோடி ரூபாயாக மதிப்பிடப் பட்டுள்ளன.
  • நிகர திறந்தநிலைச் சந்தை கடன்கள் 82,625.96 கோடி மற்றும் பிற மூலங்களிலிருந்துப் பெறப்படும் 9,240.18 கோடி ரூபாய் கடன்கள் ஆகியவை இதில் அடங்கும்.
  • மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான உச்ச வரம்பினை மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது.
  • மாநில அரசுகளானது, 2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3% வரை கடன் பெறலாம்.
  • மின்துறைச் சீர்திருத்தங்களைப் பூர்த்தி செய்வதற்காக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.5% கூடுதல் கடனைப் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
  • 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில், மொத்த மாநில உள் நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறையானது 3.25% என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • நிதிப் பற்றாக்குறை என்பது மொத்த வரவுகளுக்கும் மொத்த செலவினத்திற்கும் உள்ள ஒரு வித்தியாசமாகும்.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் மொத்த சந்தைக் கடன்கள் 87,000 கோடி ரூபாயுடன் அதிக கடன் பெறும் மாநிலங்களில் முதலிடத்தில் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்