26 ஆவது BASIC (Brazil, South Africa, India and China) சுற்றுச்சூழல் அமைச்சர்களின் சந்திப்பு அண்மையில் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றது.
இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்த சந்திப்பில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார்.
ஐ,நா–வின் பருவநிலை மாறுபாடு மீதான உடன்படிக்கை கட்டமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளின் மாநாட்டிற்கு அடுத்த தலைவராக போலந்தில் மைக்கேல் குர்டிகா மற்றும் BASIC நாடுகளின் அமைச்சர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
நான்கு மிகப் பெரிய புதிதாக தொழில்மயம் அடைந்த நாடுகளின் குழுவே புவி அரசியல் கூட்டணி (BASIC) ஆகும்.
இந்தியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்தக் குழுவில் உள்ளன. 2009-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இக்குழு தோற்றுவிக்கப்பட்டது.
பிற நாடுகளை கோபன்ஹெகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட சமாதானப்படுத்த முயல்வதும், பருவநிலை மாறுபாட்டு தடுப்பிற்கான உதவித் தொகை மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வின் மீது பொது நிலைப்பாட்டைத் தோற்றுவிப்பதும் இதன் பணிகளாகும்.